செ‌ன்னை‌யி‌ல் ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்சலு‌க்கு 3 பெ‌ண்க‌ள் ப‌லி  
    • செ‌ன்னை‌யி‌ல் கடந்த வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலியாகி இருக்கிறார்கள். ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதித்ததில் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதியானது.
    வ‌ங்க‌க்கட‌லி‌ல் பு‌திய கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை  
    • வட ஆ‌ந்த‌ி‌ராவை ஒ‌‌ட்டியு‌ள்ள வ‌ங்க‌‌க்கட‌லி‌ல் பு‌திய கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை உருவா‌கியு‌ள்ளதா‌ல் த‌மிழக‌த்த‌ி‌ல் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ - செ‌ன்னை வா‌னிலை மைய‌ம்.
    செ‌ன்னை வ‌ந்த இர‌யி‌ல் நடுவ‌ழி‌யி‌ல் ‌நிறு‌த்த‌ம்  
    • பெங்களூரில் இரு‌ந்து செ‌ன்னை வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த லா‌ல்பா‌க் இர‌யி‌ல், மா‌ட்டி‌ன் ‌மீது மோதாம‌ல் இரு‌க்க ‌பிரே‌க் போ‌ட்டதா‌ல் எ‌ன்‌‌‌ஜி‌னி‌ல் கோளாறு ஏ‌ற்ப‌ட்டு நடுவ‌ழி‌யி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.
    குறுகிய காலப் பயிரையே விவசாயிகள் பயிரிட வேண்டும்  
    • மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் குறுகிய காலப் பயிரை மட்டுமே விவசாயிகள் பயிரிடுவதுடன், அதை குறிப்பிட்ட நாளில் அறுவடை செய்ய வேண்டும் என்று சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.
    காமன்வெல்த் போட்டி: பாட்மின்டன் - இந்திய வீரர்கள் அறிவிப்பு  
    • தில்லியில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு, பாட்மின்டன் போட்டியில் இந்தியா சார்பில் சாய்னா நேஹ்வால், சேட்டன் ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
    காமன்வெல்த் போட்டியைக் கலக்க வருகிறது ஆப்பிரிக்காவின் வுவுஸேலா இசைக் கருவி  
    • ஆப்பிரிக்காவின் நூதன இசை கருவியான வுவுஸேலா டெல்லி காமன்வெல்த் போட்டியின்போதும் ரசிகர்களால் இசைக்கப்படவுள்ளது. ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான இசைக் கருவி இது.
    தியான்கி-1 : அதிவேக கம்ப்யூட்டர்  
    • சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பரிவு பல்கலை கழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. இது இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது.
    மரங்களுக்கு ராக்கி கட்டி ஒரிசா பெண்கள் அசத்தல்  
    • ஒரிசாவின் சம்பல்பூரில் உள்ள புத்தராஜா வனப்பகுதியில் மரங்களுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ராக்கி கயிறு கட்டி தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர்.
    தமிழக மீனவர்கள் மீது ஒரே ஆண்டில் இலங்கை ராணுவம் 22 முறை தாக்குதல்  
    • தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் ஒரே ஆண்டில் மட்டும் 22 முறை தாக்குதல் நடத்தியுள்ளது என, ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
    ரசாயனம் பூசிய விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம் என எச்சரிக்கை  
    • ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தொட்டியில் சாமி உருவம் விருத்தாசலம் கோவிலில் பரபரப்பு  
    • கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தொட்டியில் நிரம்பியுள்ள தண்ணீரில் சாமியின் உருவங்கள் வரைபடம் போல் தெரிந்ததை, பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு  
    • கடலூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி டீசல் விலை உயர்வு காரணமாகவும், அரசு, பஸ்கட்டண உயர்வு வழங்காததாலும் தனியார் பஸ்கள் ஓடாது என மாவட்ட பேருந்து போக்குவரத்து பொது தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
    விழுப்புரத்தில் கிடைத்த கற்சிலையால் பரபரப்பு  
    • விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தில் கிடைத்த சாமி சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் சேதுராமன், சாமி சிலையை அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.
    நாமக்கல் பள்ளியில் ஆசிரியர் தின விழா  
    • ராசி நட்புறவு நலச்சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்கத்தலைவர் ராகவன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார்.
    25 ஆண்டுகளுக்கு பின் பேருந்து வசதி  
    • அன்னூர் பகுதியில் கதவுகரை உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி 25 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் அரசு பஸ்கள் இக்கிராமங்களுக்கு இயங்க துவங்கின.
    "நமது நலம் நமது கைகளிலே' திருப்பூரில் திட்டம் துவக்கம்  
    • தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க, "நமது நலம் நமது கைகளிலே' என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
    தொடரும் நூல் விலையேற்றம் எதிரொலி : கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி கடும் பாதிப்பு  
    • தொடரும் நூல் விலை ஏற்றத்தால், கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 15 சதவீதம் வரை நூல் விலை உயர்ந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர் கூறினர்.
    இலக்கிய மன்ற துவக்க விழா  
    • பல்லடம்: கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார்.
    ராணுவமையத்தில் கண்காட்சி : வியந்துப் பார்த்த மாணவர்கள்  
    • மாணவப்பருவத்தில் ராணுவத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள உதவும் வகையில், எம்.ஆர்.சி., ராணுவ மையத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது - துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர்களை மாணவர்கள் நேரில் பார்த்து ஆச்சரியம்.
    வேறு நபர் பெயரிலுள்ள காஸை பயன்படுத்தினால் நடவடிக்கை : கரூர் டி.ஆர்.ஓ., எச்சரிக்கை  
    • "வேறு நபரின் பெயரில் உள்ள காஸ் இணைப்பை பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கரூர் டி.ஆர்.ஓ., முனிரத்தினம் கூறினார்.
 
மூட்டைப் பூச்சிக்கு எய்ட்ஸ் வரவில்லையாம் : ஒரு ஆராய்ச்சியில் எய்ட்ஸ் கலந்த ரத்தத்துடன் மூட்டை பூச்சியை கலந்துவிட்டனர். ஆச்சரியமூட்டும் வகையில் மூட்டைப்பூச்சி சாகவில்லை. அதற்கு பதிலாக எய்ட்ஸ் கிருமிகள் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.    விக்ரமின் அடுத்த படம் "ரா...ரா.." : டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ரா...ரா.. இந்த படத்தின் சூட்டிங் வெகு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.    தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசய குழந்தை : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.    கொலையின் விலை ரூ.50 ஆயிரம் : 5 பேர் கைது : ஐம்பதாயிரம் ரூபாய் கூலிக்காக, தனியார் கல்லூரி ஊழியரை தீர்த்துக்கட்டிய கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும், இருவரை தீவிரமாக தேடிவருகிறோம், என்று, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., தெரிவித்தார்.    தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு வினோத வழக்கு : ஓய்வு பெற்ற ஆசிரியை ஹரி பாசம்மா (வயது 70). இவர் பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் தீராத உடல் வலியால் வாழ முடியவில்லை, நான் இறப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கூறியிருந்தார்.    கூகிளின் தொலை பேசும் வசதி : இணையத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகிள், தற்போது இணையமூலம் தொலைபேசும் சந்தையிலும் குதித்து விட்டது.    கர்நாடகா தார்வார் மாவட்டத்தில் 75 எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு : தார்வார் மாவட்டம் அன்னகிரி நகரிலிருந்து 75 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கால்வாயை அகலப்படுத்துவதற்கென தோண்டிய போது, மாநகராட்சி ஊழியர்கள், எலும்பு கூடுகளை தோண்டி எடுத்தனர்.    மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் மதராசபட்டனம் ஏமி : மதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கவுதம் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி ஏமி ஜாக்சன்தானாம்.    மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி : திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாகும் டீன்ஏஜ் பெண்களுக்கு தனி பள்ளிக்கூடத்தினை அமைக்க மலேஷியாவின் மலாக்கா மாகாண அரசு தொடங்கவுள்ளது. இந்த பள்ளி வரும் 16-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.    அமானுஷ்ய வீடியோ காட்சிகள் வரவேற்கப்படுகின்றன : அமானுஷ்ய வீடியோ காட்சிகள் வரவேற்கப்படுகின்றன (பேய், ஆவி, விபத்து, இயற்கை மாற்றம் போன்றவைகள்.....) உங்களிடம் இருந்தால் எங்களுக்கு அனுப்பலாம் .. தொடர்புக்கு 044 -28344399 ..